சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர் விட்டுச்சென்ற காரில் தி.மு.க.,வினரின் ரூ.2.50 லட்சம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், வேளாங்கண்ணி சர்ச் அருகே நேற்று முன் தினம் இரவில் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி டி.என்.40 டி 3444 என்ற எண்ணுடைய வெள்ளை கார் வேகமாக வந்தது.போலீசாரை பார்த்ததும் டிரைவர், காரை லாக் செய்து விட்டு, இறங்கி தப்பி ஓடிவிட்டார். காரமடை போலீஸ் ஸ்டேஷனில், தேர்தல்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், வேளாங்கண்ணி சர்ச் அருகே நேற்று முன் தினம் இரவில் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி டி.என்.40 டி 3444 என்ற எண்ணுடைய வெள்ளை கார் வேகமாக வந்தது.போலீசாரை பார்த்ததும் டிரைவர், காரை லாக் செய்து விட்டு, இறங்கி தப்பி ஓடிவிட்டார். காரமடை போலீஸ் ஸ்டேஷனில், தேர்தல் செலவின பார்வையாளர் அமித்ஷா, மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணி, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில், காரின் முன்பக்க கதவு, மெக்கானிக் உதவியுடன் திறக்கப்பட்டது.காரின் உள்ளே, 2.50 லட்சம் ரூபாயும், நான்கு பிராந்தி பாட்டில்களும், தி.மு.க., சின்னத்துடன் கூடிய, 750 விளம்பர சீட்டுகள், தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் பெயர் மற்றும் சூரியன் சின்னம் அச்சிட்ட, 750 நோட்டீஸ்கள், 14 வாக்காளர் பெயர் பட்டியல்கள், பெயர்கள் எழுதிய மூன்று நோட்டுகள், ஏ.டி.எம்., கார்டுகள் இருந்தன.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X