ஓட்டுப்போட வந்த எட்டு கொரோனா நோயாளிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போட வந்த எட்டு கொரோனா நோயாளிகள் 

Added : ஏப் 07, 2021
Share
கோவை:கோவை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 250க்கும் மேல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 2,500க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில், 98 சதவீதம் பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், இந்த தேர்தலில் இவர்களுடைய ஓட்டு, முக்கியமானதாக கருதப்பட்டது.இதற்காக,

கோவை:கோவை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 250க்கும் மேல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 2,500க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில், 98 சதவீதம் பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், இந்த தேர்தலில் இவர்களுடைய ஓட்டு, முக்கியமானதாக கருதப்பட்டது.இதற்காக, விருப்பப்படும் கொரோனா நோயாளிகள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு பதிவு செய்வதற்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி, முழு கவச உடை உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கும் முழு கவச உடைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கொரோனா நோயாளிகள் ஓட்டு பதிவு செய்ய, கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.ஆனால், நேற்று நடந்த தேர்தலில் வெறும், 8 பேர் மட்டுமே ஓட்டு பதிவு செய்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகளை வரவழைப்பது, தொற்று பரவ வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரித்தும், இதற்கென கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் வீண் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X