பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் மூன்று தொகுதிகள் 69.6 சதவீதம் ஓட்டு பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளில், 69.60 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார்(தனி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு, 868 ஓட்டு சாவடி மையங்களில் நடந்தது. ஊட்டியில் 67.05, கூடலுாரில் 72.17, குன்னுாரில் 69.81 சதவீதம் ஓட்டு பதிவானது.கடந்த, 2016 தேர்தலில், ஊட்டி-68.01; குன்னுார்- 70.81, கூடலுார்-72.73 சதவீதம் ஓட்டுபதிவானது.கலெக்டர் இன்னசென்ட்

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளில், 69.60 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார்(தனி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு, 868 ஓட்டு சாவடி மையங்களில் நடந்தது. ஊட்டியில் 67.05, கூடலுாரில் 72.17, குன்னுாரில் 69.81 சதவீதம் ஓட்டு பதிவானது.கடந்த, 2016 தேர்தலில், ஊட்டி-68.01; குன்னுார்- 70.81, கூடலுார்-72.73 சதவீதம் ஓட்டுபதிவானது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''மூன்று தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்தது. இரவு, 7:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், 69.60 சதவீதம் ஓட்டுபதிவாகியுள்ளது,'' என்றார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், மாலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுபோட அனுமதிக்கப்பட்டனர். ஊட்டியில் -14, கூடலுாரில் 11, குன்னுாரில் நான்கு என, 29 கொரோனா நோயாளிகள், அதற்கான உபகரணத்துடன் பாதுகாப்பாக வந்து, அந்தந்த ஓட்டு சாவடி மையத்துக்கு சென்று ஓட்டு போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X