சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.56 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் பறிமுதல்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் நேற்று வரை, 56 கோடி ரூபாய் மதிப்புக்கு, ரொக்கம், தங்கம், வெள்ளி, மது ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதலே, பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.இவர்களிடம் சிக்கியவர்களில், அரசியல் கட்சியினரை காட்டிலும், பொதுமக்கள், வியாபாரிகளே அதிகம்.

கோவை:கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் நேற்று வரை, 56 கோடி ரூபாய் மதிப்புக்கு, ரொக்கம், தங்கம், வெள்ளி, மது ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதலே, பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.இவர்களிடம் சிக்கியவர்களில், அரசியல் கட்சியினரை காட்டிலும், பொதுமக்கள், வியாபாரிகளே அதிகம். ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது சந்தேகம் எழுந்த காரணத்தால், அவற்றில் வரும் பணத்தையும் ஆவணம் இல்லாவிடில், பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.அப்படியிருந்தும், ஏ.டி.எம்.,களில் பணம் வைக்க செல்வோர், உரிய ஆவணங்களுடன் வராமல், போலீசில் சிக்கியது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.இப்படி சிக்கிய பணம், நகை, தங்கம், வெள்ளி, மது ஆகியவற்றின் மொத்த மதிப்பு, 56 கோடி ரூபாய். இதில், பணம் மட்டுமே, 7 கோடியே 36 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் நாளான நேற்று மட்டும், 49 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய், பறக்கும் படையினர் வசம் சிக்கியது. இதில், சிங்காநல்லுாரில் அதிகபட்சமாக, 40 லட்சம் ரூபாய் சிக்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X