கவச உடையுடன் ஓட்டளிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவச உடையுடன் ஓட்டளிப்பு

Added : ஏப் 07, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆர். பொன்னாபுரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், பாதுகாப்பு கவச உடையுடன் வந்து ஓட்டு போட்டார்.பொள்ளாச்சி அருகே ஆர். பொன்னாபுரத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆர். பொன்னாபுரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், பாதுகாப்பு கவச உடையுடன் வந்து ஓட்டு போட்டார்.பொள்ளாச்சி அருகே ஆர். பொன்னாபுரத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று, சுகாதாரத்துறை அதிகாரிகள், 108 ஆம்புலன்சில், பாதுகாப்பு கவச உடை அணிந்து அவரை, ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச்சென்றனர்.அங்குள்ள பணியாளர்களும் பாதுகாப்பு கவச உடை அணிந்து இருந்தனர். பின், ஓட்டுச்சாவடியில் அவர், ஓட்டு பதிவு செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X