கோவை:கோவையில், 105 வயது முதியவர், ஓட்டளித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். இவர், 1916 ஜூன், 1ல் பிறந்தவர். தற்போது இவரது வயது, 105. விவசாயியான இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த, 1952ம் ஆண்டு முதல், அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டு அளித்துள்ளார். நேற்று காலை, முதியவர் தன் வீட்டில் இருந்து, அருகே இருந்த ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று, ஜனநாயக கடமையாற்றினார்.
மாரப்ப கவுண்டர் கூறுகையில், ''மக்களுக்கு நல்லது செய்வோரை தேர்வு செய்ய, அனைவரும் கட்டாயம் ஓட்டு அளிக்க வேண்டும்,'' என்றார்.முதியவர் ஓட்டளித்து வெளியே வரும்போது, '105 வயதானவர் வாக்களித்து செல்கிறார்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். பணியில் இருந்த இளைஞர்கள், முதியவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE