சென்னை:'தமிழகத்தில், நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க., தலைமையிலான வெற்றிக் கூட்டணிக்கு ஓட்டளித்த, தமிழக மக்களுக்கு நன்றி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்திலுள்ள, 234 தொகுதிகளில், பதிவான ஓட்டுக்களின் சதவீதத்தின், துல்லியமான கணக்கு, இன்று அல்லது நாளை வெளியிடக் கூடும்.ஓட்டுப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, தமிழகம் நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், பெருவாரியான மக்கள், அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., அணிக்கு, ஓட்டு அளித்திருப்பது உறுதியாகிறது.தமிழகத்தில், நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க., தலைமையிலான வெற்றிக் கூட்டணிக்கு ஓட்டளித்த, மக்களுக்கு நன்றி.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE