தேர்தல் பணி: ஆசிரியர் மரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணி: ஆசிரியர் மரணம்

Added : ஏப் 07, 2021
Share
திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதி காரையூர் ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணியாற்ற வந்த ஆசிரியர் ரஜினிகாந்த் உடல்நலமின்றி இறந்தார்.காரையூர் ஓட்டுச்சாவடிக்கு தேர்தல் அலுவலர் 3வது நிலைக்கு பணியாற்ற எஸ்.புதுார் ஒன்றியம் வா.புதுார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் ரஜினிகாந்த்42,நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் ஓட்டுச்சாவடிக்கு

திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதி காரையூர் ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணியாற்ற வந்த ஆசிரியர் ரஜினிகாந்த் உடல்நலமின்றி இறந்தார்.

காரையூர் ஓட்டுச்சாவடிக்கு தேர்தல் அலுவலர் 3வது நிலைக்கு பணியாற்ற எஸ்.புதுார் ஒன்றியம் வா.புதுார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் ரஜினிகாந்த்42,நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்திருந்தார்.அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு பதிலாக வேறு பணியாளர் பணியமர்த்தப்பட்டார்.

அவர் ஓட்டுச்சாவடிக்கு அருகாமையில் உள்ள கட்டடத்தில் தங்கியுள்ளார். நேற்று காலை சக ஆசிரியர் அவரை அழைத்துச் சென்றார்.திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது இவர் இறந்தது தெரிந்தது. இவர் சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்துாரைச் சேர்ந்தவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X