சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்பமெட்டு சோதனை சாவடியில் தகராறு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கம்பம்:கம்பமெட்டு சோதனை சாவடியில் தமிழகத்திற்கு வந்து ஓட்டளிக்க வேண்டும் என கும்பல் தகராறு செய்தது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களில் ஓட்டளிக்காதவர்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதித்தனர்.தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால் இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்கள் இரண்டு இடங்களிலும் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு

கம்பம்:கம்பமெட்டு சோதனை சாவடியில் தமிழகத்திற்கு வந்து ஓட்டளிக்க வேண்டும் என கும்பல் தகராறு செய்தது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களில் ஓட்டளிக்காதவர்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதித்தனர்.

தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால் இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்கள் இரண்டு இடங்களிலும் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு வருவோரை தடுக்க தமிழக அதிகாரிகள் எல்லைகளை மூடி நடவடிக்கை எடுத்தனர். நேற்று காலை முதல் கம்பமெட்டு, குமுளி, போடிமெட்டு சோதனை சாவடிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, மருத்துவம், அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

கம்பமெட்டு சோதனை சாவடியில் இடுக்கி மாவட்டத்திலிருந்து பலர் தமிழகத்திற்குள் செல்ல முயற்சித்தனர். அதிகாரிகள் மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதல் போலீசார் கம்பமெட்டுசோதனை சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே இடுக்கி மாவட்டத்தில் ஓட்டளிக்காமல் இருந்தால் அனுமதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து பலர் அனுமதிக்கப்பட்டனர்.ஓட்டளித்தவர்களை இரவு 7:00 மணிக்கு மேல் வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.காலையிலிருந்து எல்லையோர சோதனை சாவடிகளில் ரகளை நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X