சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போடாத ஸ்ரீவி.,வேட்பாளர்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி காங்., வேட்பாளர் மாதவராவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரசாரத்திற்கு வரமுடியாமலும், தனக்காக தனது ஓட்டையும் பதிவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.காங்.,வேட்பாளர் மாதவராவிற்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துாராக இருந்தாலும் சென்னையில் தங்கி தொழில் செய்து வருகிறார். வேட்புமனுதாக்கல் செய்த
 ஓட்டுப்போடாத ஸ்ரீவி.,வேட்பாளர்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி காங்., வேட்பாளர் மாதவராவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரசாரத்திற்கு வரமுடியாமலும், தனக்காக தனது ஓட்டையும் பதிவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

காங்.,வேட்பாளர் மாதவராவிற்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துாராக இருந்தாலும் சென்னையில் தங்கி தொழில் செய்து வருகிறார். வேட்புமனுதாக்கல் செய்த மறுநாள் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், உடல்நலக் குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருமுறை எடுக்கபட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்றாலும் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தலால், தேர்தல் பிரசாரத்திற்கு வராமல் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டுமே பிரசாரம் செய்து வந்தனர். ஓட்டுப்பதிவு முன்பு உடல்நலமடைந்து வந்துவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஓட்டுபதிவு அன்று கூட வரமுடியாமல் தொகுதியில் ஓட்டு இருந்தும் தனக்கே தனது ஓட்டை போடமுடியாத நிலைக்கு ஆளானார்.

அவருடைய ஒரே மகளின் ஓட்டும் சென்னை முகவரியில் இருந்ததால் அவரும் தன் தந்தைக் காக ஓட்டு போடமுடியவில்லை. இச்சூழ்நிலை ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி வரலாற்றில் இதுவரை இல்லாத விசித்திரம் என வாக்காளர்கள் தெரிவித்தனர். நேற்று ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் முடிவிற்காக மாதவராவ் காத்திருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X