கோவை:'அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்' என்று, தொண்டாமுத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, நேற்று புகார் தெரிவித்தார்.கோவை கலெக்டர் நாகராஜனை நேரில் சந்தித்து புகார் தெரிவித்த கார்த்திகேய சிவசேனாபதி, நிருபர்களிடம் கூறியதாவது:தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரத்தில் ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடியை பார்வையிட்டு வெளியே வந்தேன். அப்போது அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர், சம்பத், வீரமணி ஆகியோரும், பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும் அங்கு இருந்தனர்.எங்களை கண்ட உடன், கூச்சலிட்டு மிரட்டி, தகராறில் ஈடுபட்டனர். தாக்கவும் முயற்சித்தனர். 'எங்கண்ணன் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து நிற்கிறியா, கழுத்தை அறுத்து விடுவோம்' என்று வீரமணி மிரட்டினார்.தோல்வி பயத்தில் இப்படி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் வந்தபிறகு தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. அவர் தான் எங்களை பாதுகாத்தார். அந்த இடத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., சிலம்பரசன் ஆகியோர், அ.தி.மு.க.,வினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.சம்பவம் தொடர்பாக, அன்பரசன், சந்திரசேகர், சம்பத், வீரமணி கைது செய்யப்பட வேண்டும். போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.,வினரால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஓட்டுப்பதிவு தடைபட்டது. அந்த நேரத்தை நீட்டித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.இவ்வாறு சிவசேனாபதி கூறினார்.அ.தி.மு.க., புகார்கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரின் முகவர் சந்திரசேகர், 'தன் மீது கார்த்திகேய சிவசேனாபதி, பொய்யான புகார் கூறி, அவதுாறு பரப்புகிறார். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE