சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்!

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:திருவையாறு அருகே, அதிகாரிகள் அலட்சியத்தால், 16 வயது மாணவன் ஓட்டு போட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட அரசூரில், 164வது ஓட்டுச்சாவடியில், அரசூர் கீழத்தெருவைச் சேர்ந்த பாலமுருகன், 19, என்பவர், முதல் முறையாக ஓட்டளிக்க வந்தார்.ஆனால், அவரது ஓட்டை, புதுத் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் என்ற, 16 வயது மாணவன் போட்டுள்ளார். அதிகாரிகள் சரியாக

தஞ்சாவூர்:திருவையாறு அருகே, அதிகாரிகள் அலட்சியத்தால், 16 வயது மாணவன் ஓட்டு போட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட அரசூரில், 164வது ஓட்டுச்சாவடியில், அரசூர் கீழத்தெருவைச் சேர்ந்த பாலமுருகன், 19, என்பவர், முதல் முறையாக ஓட்டளிக்க வந்தார்.ஆனால், அவரது ஓட்டை, புதுத் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் என்ற, 16 வயது மாணவன் போட்டுள்ளார். அதிகாரிகள் சரியாக விசாரிக்காததால், 18 வயது நிரம்பாத சிறுவன் ஓட்டளித்த சம்பவம் நடந்துள்ளது.

அதேபோல, அரசூர், வன்னியர் தெருவைச் சேர்ந்த அஞ்சம்மாள், 55, ஓட்டை, புதுத்தெருவைச் சேர்ந்த அஞ்சம்மாள், 53, போட்டு சென்றார். ஒரே பெயர் கொண்டவர்கள், மாற்றி ஓட்டளித்தது தெரிந்தது.அதனால், புதுத்தெரு அஞ்சம்மாள் ஓட்டை, வன்னியர் தெரு அஞ்சம்மாள் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் அனுமதித்ததால், அவர் ஓட்டளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X