அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக கவசத்தில் உதயசூரியன்: 'மாஜி'க்கு அனுமதி மறுப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஈரோடு:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, நேற்று ஓட்டு போட வந்தார்.அவர், வெள்ளை நிற முக கவசம் அணிந்திருந்தார். அதில் உதயசூரியன் சின்னத்துடன், '2021 வெல்லும் தி.மு.க.,' என, எழுதப்பட்டிருந்தது.ஓட்டுச்சாவடி அருகே
 முக கவசத்தில் உதயசூரியன்: 'மாஜி'க்கு அனுமதி மறுப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, நேற்று ஓட்டு போட வந்தார்.அவர், வெள்ளை நிற முக கவசம் அணிந்திருந்தார். அதில் உதயசூரியன் சின்னத்துடன், '2021 வெல்லும் தி.மு.க.,' என, எழுதப்பட்டிருந்தது.ஓட்டுச்சாவடி அருகே வந்தபோது, அவரை ஒரு எஸ்.ஐ., தடுத்து, 'கட்சி சின்ன முக கவசத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது' என்றார். அத்துடன் ஓட்டுச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த, நீல நிற துணி முக கவசத்தை வழங்கினார். அதை அணிந்து, சுப்புலட்சுமி ஓட்டு போட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X