சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஹெல்மெட் கழற்ற முடியாது'  வாக்காளர் பிடிவாதத்தால் பரபரப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பி.என்.புதுார், வடவள்ளி மெயின் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வாக்காளர் ஒருவர், ஹெல்மெட் அணிந்து வந்தார். ஓட்டுச்சாவடிக்குள் ஹெல்மெட் அணிந்தபடியே ஓட்டுப்போட வரிசையில் நின்றார்.அவரிடம் சென்ற போலீசார் ஹெல்மெட் கழற்றுமாறு தெரிவித்தனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஹெல்மெட் அணிந்து ஓட்டுச்சாவடிக்குள்
'ஹெல்மெட் கழற்ற முடியாது'  வாக்காளர் பிடிவாதத்தால் பரபரப்பு

கோவை:கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பி.என்.புதுார், வடவள்ளி மெயின் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வாக்காளர் ஒருவர், ஹெல்மெட் அணிந்து வந்தார். ஓட்டுச்சாவடிக்குள் ஹெல்மெட் அணிந்தபடியே ஓட்டுப்போட வரிசையில் நின்றார்.அவரிடம் சென்ற போலீசார் ஹெல்மெட் கழற்றுமாறு தெரிவித்தனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஹெல்மெட் அணிந்து ஓட்டுச்சாவடிக்குள் செல்லக்கூடாது என, பலமுறை எடுத்துக்கூறியும் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.அதற்கான காரணத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்ட போது, கொரோனா அச்சத்தின் காரணமாக ஹெல்மெட் அணிந்து வந்துள்ளதாகவும், அதை கழற்றி வைக்க முடியாது எனவும் தெரிவித்தார். ஓட்டுச்சாவடிக்குள் சென்ற அவர், ஓட்டுப் போட்டு விட்டு, மீண்டும் ஹெல்மெட் அணிந்து திரும்பி சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X