ஓட்டுப்பதிவை வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவை வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி

Added : ஏப் 07, 2021
Share
சூலுார்:தான் ஓட்டளிப்பதை, மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பிய அ.தி.மு.க., ஐ.டி., 'விங்' நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட, அப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபரி,30; அ.தி.மு.க., ஐ.டி., விங்கில் நிர்வாகியாக உள்ளார்.இவர், தான்
 ஓட்டுப்பதிவை வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி

சூலுார்:தான் ஓட்டளிப்பதை, மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பிய அ.தி.மு.க., ஐ.டி., 'விங்' நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட, அப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபரி,30; அ.தி.மு.க., ஐ.டி., விங்கில் நிர்வாகியாக உள்ளார்.இவர், தான் அ.தி.மு.க.,வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, தனது மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.சூலூர் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி கூறுகையில், ''ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் எடுத்து சென்று படம் எடுத்தது தேர்தல் விதிகளை மீறிய செயல். இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது. அதன்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X