அரசியல் செய்தி

தமிழ்நாடு

பண பட்டுவாடா டோக்கன்: காங்., வேட்பாளர் மறியல்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வைசியாள் வீதியில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவுக்கு டோக்கன் வினியோகிக்கப்படுவதாக கூறி, காங்.,வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.கோவை தெற்கு தொகுதியில், கருப்பகவுண்டர் வீதி, துறையர் வீதி, தர்மராஜா கோவில் வீதி, அங்காளம்மன் கோவில் வீதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க டோக்கன்
 பண பட்டுவாடா டோக்கன்: காங்., வேட்பாளர் மறியல்

கோவை:கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வைசியாள் வீதியில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவுக்கு டோக்கன் வினியோகிக்கப்படுவதாக கூறி, காங்.,வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.கோவை தெற்கு தொகுதியில், கருப்பகவுண்டர் வீதி, துறையர் வீதி, தர்மராஜா கோவில் வீதி, அங்காளம்மன் கோவில் வீதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க டோக்கன் வினியோகித்துள்ளதாக கூறி, காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், வைசியாள் வீதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து, புகார் குறித்து விசாரிப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.மயூரா ஜெயக்குமார் கூறுகையில்,''அதிகாலை முதல் வீடுவீடாக பணப்பட்டுவாடா நடந்துள்ளது. சில நெருக்கடியான இடங்களில் மட்டும், டோக்கன் மற்றும் கடையின் விசிட்டிங் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வந்து, டோக்கன்களை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்திருந்தனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால் தான் மறியலில் இறங்கினேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X