அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பெஞ்சமின் ஆபாச பேச்சு முகப்பேர் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:ஓட்டுப் பதிவை பார்வையிட வந்த அமைச்சர் பெஞ்சமின், தன்னை கிண்டல் செய்த, தி.மு.க.,வினரை திட்டும் சாக்கில், குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் பெயரைக் கூறியும், அவர்கள் அணியும் புனித அடையாளத்தை கொச்சைப்படுத்தியும் பேசிய சம்பவம், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான, ஓட்டுப் பதிவு, அமைதியாக நடந்து கொண்டிருந்தது.
 அமைச்சர் பெஞ்சமின் ஆபாச பேச்சு முகப்பேர் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு

சென்னை:ஓட்டுப் பதிவை பார்வையிட வந்த அமைச்சர் பெஞ்சமின், தன்னை கிண்டல் செய்த, தி.மு.க.,வினரை திட்டும் சாக்கில், குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் பெயரைக் கூறியும், அவர்கள் அணியும் புனித அடையாளத்தை கொச்சைப்படுத்தியும் பேசிய சம்பவம், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான, ஓட்டுப் பதிவு, அமைதியாக நடந்து கொண்டிருந்தது. போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப் பதிவு நிலவரம் குறித்து, நேரடி ஆய்வு செய்து வந்தனர்.ஆபாச பேச்சுஅதன்படி, சென்னை, மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின், 92வது வார்டு, முகப்பேரில் உள்ள, ஓட்டுச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், அமைச்சர் பெஞ்சமினை நோக்கி, தங்களது கட்சிக் கொடியை அசைத்து, அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், பொது இடம் என்றும் பாராமல், தி.மு.க.,வினருடன் சண்டைக்குப் போனார். அவர்களை அசிங்க அசிங்கமாக திட்டினார். அந்த சாக்கில், ஒரு ஜாதியினரின் பெயரை குறிப்பிட்டதுடன், அந்த சமுதாயத்தினர் அணியும் புனித அடையாளத்தை கொச்சைப் படுத்தும் விதமாக, 'நான் அதையா அணிந்து வந்திருக்கிறேன்' என, ஆபாசமாக பேசினார். மேலும் ஆவேசமாக, 'நீங்க என்னடா கருணாநிதி புள்ளைங்களா, பேரன்களா' என்றும் கொந்தளித்தார். அவருடன் இருந்தவர்களும், 'அமைச்சரை கிண்டல் செய்தது யார்?' எனக் கேட்டு, தி.மு.க.,வினரை தேடிச் சென்று தாக்க முயற்சித்தனர்.


அமைச்சர் கடுப்பு

ட்சிகளை பார்த்த, அமைச்சர்கள் பலரும், பெஞ்சமினை தொடர்பு கொண்டு, என்ன நடந்தது எனறு விசாரித்துள்ளனர்.அடுத்தடுத்து, அவரது ஆதரவாளர்களும் தொடர்பு கொண்டதால், அமைச்சர் கடுப்பானார்.

இதுகுறித்து, அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது :மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட, முகப்பேர் ஓட்டுச்சாவடியை ஆய்வு செய்யச் சென்றேன். அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், அக்கட்சி கொடியை காட்டி, என்னை கலாய்த்தனர். தி.மு.க.,வினர் எல்லை மீறி, அங்கு வந்த பெண்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள், என்னிடம் புகார் செய்தனர். அதனால், தி.மு.க.,வினரை கண்டித்து, அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து, தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு சார்பில், முகப்பேரைச் சேர்ந்த நவராஜ், 36, என்பவர், மதுரவாயல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஜெ.ஜெ.,நகர் போலீசாரிடம் புகார் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
10-ஏப்-202119:23:29 IST Report Abuse
ocean திமுகவினர் குசும்பு பிடித்தவர்கள்.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் கட்சி கொடியை காட்டி, என்னை கலாய்த்தனர்.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
08-ஏப்-202109:39:49 IST Report Abuse
Hari ஏண் உனக்கெல்லாம் மந்திரி பதவி ஒரு கேடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X