பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் வினியோகம்: தேர்தல் அலுவலரிடம் கமல் ஆதாரத்துடன் புகார்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:''கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் பட்டுவாடா மும்முரமாக நடக்கிறது. விசாரித்து, சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' என, தேர்தர் அலுவலரிடம், ம.நீ.ம., தலைவர் கமல் வலியுறுத்தினார்.கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை, 7:00 மணி முதலே, வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவு
 வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் வினியோகம்: தேர்தல் அலுவலரிடம் கமல் ஆதாரத்துடன் புகார்

கோவை:''கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் பட்டுவாடா மும்முரமாக நடக்கிறது. விசாரித்து, சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' என, தேர்தர் அலுவலரிடம், ம.நீ.ம., தலைவர் கமல் வலியுறுத்தினார்.கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை, 7:00 மணி முதலே, வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர். 84வது வார்டு, கெம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளியில் ஓட்டளித்தவர்களுக்கு, பரிசுப்பொருட்கள், பணம் வழங்க, டோக்கன் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.சென்னையில் இருந்து விமானத்தில் வந்த, மக்கள் நீதி மய்யம் தலைவரும், தொகுதி வேட்பாளருமான கமல், தனது மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன், அந்த ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்றார்.தேர்தல் நிலை அலுவலர்களிடம் ஓட்டுப்பதிவு நிலவரங்களை விசாரித்தனர். அவரது கட்சி நிர்வாகிகள், டோக்கன் வினியோகிப்பது தொடர்பாக, தெரிவித்தனர்.அங்கு, நிருபர்களிடம் கமல் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு நன்றாக நடக்கிறது; கூட்டம் அதிகமாக உள்ளது. வெளியே பணம் பட்டுவாடா மும்முரமாக நடக்கிறது. பொருளாக பெற்றுக் கொள்ளச் சொல்லி டோக்கன் வழங்குகின்றனர். இதெல்லாம் எனக்கு வந்த தகவல். அதைகேட்டு, புறப்பட்டு வந்தேன். எல்லா இடங்களிலும் பணம் பட்டுவாடா அதிதீவிரமாக நடக்கிறது. குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க மீண்டும் மறுஓட்டுப்பதிவு நடத்த வேண்டியிருக்கும்; அதை நாங்கள் வலியுறுத்துவோம்,'' என்றார்.அதன்பின், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்தை, நேரில் சந்தித்து புகார் கடிதம் கொடுத்தார். அதனுடன், 'ஸ்ரீ கணபதி ஏஜன்சீஸ்' என குறிப்பிட்டு வழங்கியிருந்த டோக்கன் மாதிரியை இணைத்திருந்தார்.தகுதி நீக்கம் செய்யவும்!கமல் சார்பில், கட்சியின் வக்கீல் அணி மாநில செயலாளரும், தொகுதி தேர்தல் முகவருமான உதயகுமார் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனியில் உள்ள வாக்காளர்களுக்கு, டி.என்., 99 ஜெ 1503 என்ற எண்ணுள்ள வாகனத்தில் வந்து, டோக்கன் வினியோகித்து வருகின்றனர். அதை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என, சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர். அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள், மேற்கண்ட டோக்கன்களை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்ட நபர்களையும், அவர்கள் சார்ந்துள்ள கட்சியையும், குற்றத்துக்கு துணை நிற்கும் வேட்பாளரையும் விசாரித்து, வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.வழக்கு பதிவுதெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''ம.நீ.ம., வேட்பாளர் கமல், காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் கொடுத்த புகார்களை, காவல் துறைக்கு பரிந்துரைத்துள்ளேன். போலீசார் விசாரித்து, வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X