அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க.,வினர் மீது தாக்கு தினகரன் கடும் கண்டனம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:சோளிங்கர் தொகுதியில், அ.ம.மு.க.,வினர் மீது, பா.ம.க.,வினர் தாக்குதல் நடத்தியதற்கு, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட, நெமிலி பேரூராட்சி ஓட்டுச்சாவடியில், பா.ம.க.,வினர் கள்ள ஓட்டு போட வந்தனர். அவர்களை, அ.ம.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் களான, குணசேகர், நித்யா; எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலர் தட்சிணாமூர்த்தி,

சென்னை:சோளிங்கர் தொகுதியில், அ.ம.மு.க.,வினர் மீது, பா.ம.க.,வினர் தாக்குதல் நடத்தியதற்கு, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட, நெமிலி பேரூராட்சி ஓட்டுச்சாவடியில், பா.ம.க.,வினர் கள்ள ஓட்டு போட வந்தனர். அவர்களை, அ.ம.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் களான, குணசேகர், நித்யா; எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி துணை செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் தட்டிக் கேட்டனர்.

அவர்கள் மீது, போலீசார் கண்ணெதிரிலேயே, பா.ம.க.,வினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், ஆளும் கட்சியினருக்கு சாதகமாக மவுனம் காத்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு, அ.ம.மு.க., வேட்பாளருடன் வந்த கார்கள் மீதும், பா.ம.க.,வினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, தேர்தல் கமிஷன் இனியும் வேடிக்கை பார்க்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.


'அ.ம.மு.க.,வுக்கு வாய்ப்பு'

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அளித்த பேட்டி: தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தீய சக்தியையும், துரோக சக்தியையும், ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து, ஜெ.,வின் உண்மையான சக்தியான, அ.ம.மு.க.,வுக்கு வாய்ப்பளிப்பர். கோவில்பட்டி தொகுதியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அ.ம.மு.க., தற்போது செயல்படுவதுபோல், வரும் காலத்திலும் செயல்படும்.

அ.தி.மு.க., தோல்வி பயத்தில் உள்ளது. அதனால், சில வேட்பாளர்களை, 10 கோடி, 20 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில், 'ஜாமர்' பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதை, தேர்தல் கமிஷன் செய்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X