சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடியில் கமல் மகள்: தேர்தல் விதிமுறை மீறல்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை தெற்கு தொகுதயில் கெம்பட்டி காலனியில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த ஓட்டுச்சாவடிக்கு, கமல் விரைந்து வந்தார். அவருடன், மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் பாதுகாவலர்கள் உடன் வந்திருந்தனர். அவர்களும் 'பூத்'துக்குள் சென்றனர். அவர்களை தேர்தல் அலுவலர்கள் தடுத்து நிறுத்தவில்லை.கமல் சென்ற சாவடிகளுக்குள், ஸ்ருதியும்,

கோவை:கோவை தெற்கு தொகுதயில் கெம்பட்டி காலனியில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த ஓட்டுச்சாவடிக்கு, கமல் விரைந்து வந்தார். அவருடன், மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் பாதுகாவலர்கள் உடன் வந்திருந்தனர். அவர்களும் 'பூத்'துக்குள் சென்றனர். அவர்களை தேர்தல் அலுவலர்கள் தடுத்து நிறுத்தவில்லை.கமல் சென்ற சாவடிகளுக்குள், ஸ்ருதியும், பாதுகாவலரும் பின்தொடர்ந்து சென்றனர். தேர்தல் விதிமுறைப்படி, வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே ஓட்டுச்சாவடிக்குள் செல்ல வேண்டும். விதிமுறையை மீறி, தனது மகளையும், பாதுகாவலர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார் கமல்.தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''கமலுடன் அவரது மகளும் உடன் செல்வது, நீங்கள் சொல்லியே, எனக்குத் தெரிகிறது. உடனடியாக, தேர்தல் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X