சென்னை:வாக்காளர்களுக்கு, தன் பெயர் தெரியும்படி சுவரொட்டி ஒட்டுமாறு, தேர்தல் அதிகாரியுடன், தி.மு.க., வேட்பாளர், 'ஐட்ரீம்' மூர்த்தி முறையிட்டார்.
சென்னை, ராயபுரம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமாரை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி போட்டியிடுகிறார். நேற்று, ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், ராயபுரம் சிக்னல் அருகில் இருந்த ஓட்டுச்சாவடிக்கு, நேற்று காலை, 10:30 மணிக்கு மூர்த்தி சென்றார்.
வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை அடங்கிய, சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததில், தன் பெயர், சின்னம் வாக்காளர்களுக்கு தெரியாதபடி இருப்பதாகவும், அதை, வாக்காளர்கள் பார்க்கும்படி ஒட்டுமாறும், தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். 'வேண்டுமென்றே அப்படி ஒட்டப்படவில்லை' என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE