அமைச்சர் மீது வழக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் மீது வழக்கு

Added : ஏப் 07, 2021
Share
கோவை:தொண்டாமுத்துார் தொகுதி தேர்தல் முதன்மை அதிகாரி மகேஷ் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், 'தேர்தல் கமிஷன் அறிவித்த பிரசார நேரம் முடிந்த பின், அமைச்சர் வேலுமணி உள்பட கட்சியினர், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இப்புகாரின்பேரில்

கோவை:தொண்டாமுத்துார் தொகுதி தேர்தல் முதன்மை அதிகாரி மகேஷ் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், 'தேர்தல் கமிஷன் அறிவித்த பிரசார நேரம் முடிந்த பின், அமைச்சர் வேலுமணி உள்பட கட்சியினர், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இப்புகாரின்பேரில் அமைச்சர் வேலுமணி உள்பட கட்சியினர் மீது தேர்தல் விதிமீறல், கொரோனா போன்ற பெருந்தொற்று அபாயத்தை பரப்பும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளில், செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X