தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

வியூக நிபுணர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:ஓட்டுப்பதிவு நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து, தேர்தல் ஆலோசனை நிறுவன நிர்வாகிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை, பீஹாரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது. அந்த நிறுவனம் வகுத்து வந்த வியூகத்தின்படியே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் பிரசாரம்

சென்னை:ஓட்டுப்பதிவு நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து, தேர்தல் ஆலோசனை நிறுவன நிர்வாகிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை, பீஹாரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது. அந்த நிறுவனம் வகுத்து வந்த வியூகத்தின்படியே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் பிரசாரம் அமைந்தது.இந்த ஆலோசனை நிறுவனத்திற்கு, சென்னை, அறிவாலயத்திலும், நந்தனத்திலும் அலுவலகங்கள் அமைக்கப் பட்டு இருந்தன.

தேனாம்பேட்டையில் உள்ள, எஸ்.ஐ.இ.டி., கல்லுாரியில் ஓட்டு அளித்த பின், ஆலோசனை நிறுவன அலுவலகத்திற்கு, ஸ்டாலின் சென்றார். அங்குள்ள நிர்வாகிகளிடம், ஓட்டுப்பதிவு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சபரீசன் உடனிருந்தார்.ஆலோசனை நிறுவன நிர்வாகிகள், தொகுதி வாரியாக பணியாற்றுகிற ஊழியர்களிடம் தகவலை பெற்று, ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X