சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வில்லிவாக்கத்தில் கள்ள ஓட்டு வசமாக சிக்கிய மோசடி ஆசாமி

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர், ரவிச்சந்திர ஹாசன், 45. இவர், தெற்கு ஜெகநாதன் நகர், 2வது பிரதான சாலை, அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள, ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு செய்ய வந்துள்ளார்.அப்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஏற்கனவே உங்கள் ஓட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 வில்லிவாக்கத்தில் கள்ள ஓட்டு வசமாக சிக்கிய மோசடி ஆசாமி

சென்னை:வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர், ரவிச்சந்திர ஹாசன், 45. இவர், தெற்கு ஜெகநாதன் நகர், 2வது பிரதான சாலை, அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள, ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு செய்ய வந்துள்ளார்.அப்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஏற்கனவே உங்கள் ஓட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரஹாசன் அலுவலரிடம் முறையிட்டுள்ளார்.அப்போது, இவரது பெயரிலே, கள்ள ஓட்டு பதிவு செய்த நபர், ஓட்டுச்சாவடி மையத்திலே சுற்றித்திரிந்து உள்ளார். அவரை, ம.நீ.ம., கட்சியினர் பிடித்து, தேர்தல் அலுவலரிடம் ஓப்படைந்தனர்.

இது குறித்து, ரவிச்சந்திரன் ஹாசன் கூறுகையில், ''எனது பெயரிலே இருந்த, ரவிச்சந்திரன் என்பவர், டிரைவிங் லைசன்ஸ்' ஆதாரமாக வைத்து, அதிகாரிகளின் உதவியுடன், எனது ஓட்டை பதிவு செய்துள்ளார். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

.இதையடுத்து, ரவிச்சந்திரன் ஹாசனுக்கு, மாற்று வழி மூலம், ஓட்டு பதிவு செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டது.இது குறித்து, தேர்தல் நடத்து அலுவலரிடம் கேட்ட போது, ''சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்,'' என்றார்.கள்ள ஓட்டு பதிவு செய்த நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஏப்-202113:29:27 IST Report Abuse
Bhaskaran Arasu athigaarikal thangal kadamayai olungaa gave seivathillai
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
07-ஏப்-202109:43:34 IST Report Abuse
amuthan ஒரு அம்பது வருஷத்தில் தீர்ப்பு வந்திடும்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-202101:20:50 IST Report Abuse
தமிழவேல் இதுபோல திருட்டு ஓட்டு போடுவதற்கு சாதகமாகத்தான் ஓட்டு கார்டை ஆதாருடன் இணைக்காமல் வைத்துள்ளான்கள்.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
12-ஏப்-202113:12:45 IST Report Abuse
HSRபீட்டர் அப்படியே இனச்சிட்டாலும் தீம்கா ஆளுங்க விட்ருவானுங்களா என்ன,? கள்ள ஒட்டு கள்ள பெயர் கள்ள பணம் , எல்லாமே கள்ளம்தான்.உன்னையும் சேர்த்துதான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X