பொது செய்தி

தமிழ்நாடு

கன்னிவாடியில் இறந்தவர் ஓட்டை பதிவு செய்த அதிகாரிகள்: பா.ம.க., சின்னத்தை மறைத்ததாக புகார்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கன்னிவாடி:ஆத்துார் தொகுதியில் இறந்தவர் ஓட்டை அதிகாரிகளே பதிவு செய்ததாகவும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ம.க., சின்னத்தை மறைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி (எண் 92)யில், கூடுதல் ஓட்டு பதிவானதாக பிரச்னை உருவானது. 447 ஓட்டுகள் பதிவானதாக ஏஜென்ட்கள் குறிப்பெடுத்திருந்த நிலையில், இயந்திரத்தில் ஒரு ஓட்டு
 கன்னிவாடியில் இறந்தவர் ஓட்டை பதிவு செய்த அதிகாரிகள்: பா.ம.க., சின்னத்தை மறைத்ததாக புகார்

கன்னிவாடி:ஆத்துார் தொகுதியில் இறந்தவர் ஓட்டை அதிகாரிகளே பதிவு செய்ததாகவும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ம.க., சின்னத்தை மறைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி (எண் 92)யில், கூடுதல் ஓட்டு பதிவானதாக பிரச்னை உருவானது. 447 ஓட்டுகள் பதிவானதாக ஏஜென்ட்கள் குறிப்பெடுத்திருந்த நிலையில், இயந்திரத்தில் ஒரு ஓட்டு கூடுதலாக பதிவாகி இருந்தது.

இதற்கான பதிவேட்டை சரிபார்த்தபோது, வரிசை எண் 986ல் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த அம்பேத்கர் என்பவரது கையெழுத்திட்டு, அங்கிருந்த ஊழியர்களே ஓட்டுப் பதிவு செய்தது உறுதியானது. இப்பிரச்னையால் சரிபார்ப்பு படிவத்தில் கையெழுத்திட மறுத்த ஏஜென்டுகள், மறுஓட்டுப்பதிவை வலியுறுத்தினர். தேர்தல் நடத்தும் அலுவலரின் வருகைக்காக காத்து இருந்தனர்.

ஆத்துார் ஒன்றியம் பாளையங்கோட்டை அருகே பழையகாமன்பட்டி ஓட்டுச்சாவடியில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசக்திவேல் ஓட்டுச்சாவடியை பார்வையிட்டார்.அங்கு ஏஜென்டுகள் குறித்து வைத்திருந்த எண்ணிக்கையைவிட, கூடுதல் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தபோது அங்கிருந்த சிலர் அவரை மிரட்டி அனுப்பினர்.

மறைக்கப்பட்ட 'மாம்பழம்'சுரைக்காபட்டி ஓட்டுச்சாவடியில் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா வின் பெயர், போட்டோ, சின்னம், ஓட்டளிக்கும் பொத்தான் ஆகியவற்றை யாரோ ஒருவர் கருப்பு வர்ண ஸ்டிக்கரால் மறைத்துள்ளார். நேற்று மாலை 6:00 மணிக்கு இதை கவனித்த அ.தி.மு.க.,வினர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் பலனில்லை. இரவு 8:00 மணிக்கு அங்கு கூடிய ஆதரவாளர்களுடன் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா மறு ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியின் வருகைக்காக கட்சியினருடன் காத்திருந்தார்.இச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸ், தேர்தல் ஆணையத்தில் பா.ம.க., வேட்பாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X