தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

மயிலாப்பூர் தொகுதியில் ஓட்டளித்த பிரபலங்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், ம.நீ.ம., தலைவர் கமல், நடிகை ஸ்ரீபிரியா, த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட பிரபலங்கள் ஓட்டளித்தனர்.சென்னை மயிலாப்பூர், ஆழ்வார பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள, சென்னை உயர்நிலைப் பள்ளி ஓட்டுசாவடியில், ம.நீ.ம., தலைவர் கமல், அவரது மகள்கள் ஸ்ருதி, அக் ஷரா ஆகியோருடன், நேற்று காலை, 7:00 மணிக்கு வந்து ஓட்டளித்தார். மயிலாப்பூர் தொகுதி, ம.நீ.ம., வேட்பாளர்

சென்னை:மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், ம.நீ.ம., தலைவர் கமல், நடிகை ஸ்ரீபிரியா, த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட பிரபலங்கள் ஓட்டளித்தனர்.

சென்னை மயிலாப்பூர், ஆழ்வார பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள, சென்னை உயர்நிலைப் பள்ளி ஓட்டுசாவடியில், ம.நீ.ம., தலைவர் கமல், அவரது மகள்கள் ஸ்ருதி, அக் ஷரா ஆகியோருடன், நேற்று காலை, 7:00 மணிக்கு வந்து ஓட்டளித்தார். மயிலாப்பூர் தொகுதி, ம.நீ.ம., வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, ஆர்.ஏ.புரத்தில் உள்ள, குமாரராஜா முத்தையா நடுநிலைப் பள்ளியில் ஓட்டு போட்டார்.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டை, பீமண்ணா கார்டன் தெருவில் உள்ள, சென்னை மேல்நிலைப் பள்ளியில், ஓட்டை பதிவு செய்தார்.மந்தைவெளி ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி வளாக ஓட்டுச்சாவடியில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகா, தன் ஓட்டை பதிவு செய்தார்.நடிகர் எஸ்.வி.சேகர் மந்தைவெளி, செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X