அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விதி மீறல்: உதயநிதி மீது புகார்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (36+ 55)
Share
Advertisement
சென்னை:'தேர்தல் விதிகளை மீறிய உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம்அளித்துள்ள புகார் மனு:சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதிஓட்டுப்பதிவு தினமான நேற்று
தேர்தல், விதி மீறல், உதயநிதி,

சென்னை:'தேர்தல் விதிகளை மீறிய உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம்அளித்துள்ள புகார் மனு:சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதிஓட்டுப்பதிவு தினமான நேற்று மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.இ.டி. மகளிர்கல்லுாரியில் ஓட்டுச்சாவடி எண் - 19ல் ஓட்டளிக்க சென்றார்.அப்போது தி.மு.க. கொடியுடன் கூடிய சூரியன் சின்னத்தை தன் சட்டையில் குத்தி சென்று ஓட்டளித்துள்ளார்.


latest tamil newsஇது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல். பிரசார தடையை மீறிய செயலாகவும் தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகவும் கருதப்படுகிறது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

'இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (36+ 55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
07-ஏப்-202116:10:04 IST Report Abuse
SANKARAN NAGARAJAN இங்கு உதய நிதி, கோவையில் வானதி? இந்த தலைவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்களா? இல்லை நம்மை என்ன செய்ய முடியும் என்ற விதத்தில் செய்கிறார்களா ????
Rate this:
Cancel
Raja - chennai,இந்தியா
07-ஏப்-202112:34:18 IST Report Abuse
Raja 2014 பாராளுமன்ற தேர்தலின் போது இதையே தான் நமது பாரத பிரதமரும் செய்தார். முதலில் அவர் மீது நடவடிக்கை எடுத்து விட்டு பின்னர் உதயநிதி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும். இருந்தாலும் இந்த சிறு விதிமுறை கூட தெரியாமல் இருப்பது ஒரு வேட்பாளருக்கு அழகல்ல.
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
07-ஏப்-202112:44:42 IST Report Abuse
Rajபிரதமருகே தெரியவில்லை எனும் போது வேட்பாளருக்கு எப்படி தெரியும்...
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202114:05:52 IST Report Abuse
vadiveluமோடி யாரை கொலையாளி என்று சொன்னார். சோனியா மோடியை கொலையாளிகளின் மொத்த வியாபாரி என்று சொல்லி இருக்கிறார்....
Rate this:
234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
07-ஏப்-202114:28:01 IST Report Abuse
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம் இப்படி நடவடிக்கை என்றால் kamal / velumani / vaandhi இவர்கள் மீது தான் எடுக்கணும் ,...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஏப்-202116:27:40 IST Report Abuse
Endrum Indianநானொரு முட்டாளுங்க என்னை நல்லாத்தெரிஞ்ச நாலு பேரு சொன்னாங்க மிக விளக்கமாக தெரிகின்றது...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
07-ஏப்-202112:29:58 IST Report Abuse
அறவோன் திமுக என்டால் பயம் , திராவிடம் என்டால் பயம், கருணா என்டால் பயம், ஸ்டாலின் என்டால் பயம், கனிமொழி என்டால் பயம், உதயநிதி என்டால் பயம், தமிழன் என்டால் பயம், தமிழ்நாடு என்டால் பயம், இவ்வாறு பாஜக கூடாரம் எதை நினைத்தாலும் அரண்டுவிடும் 😱😨😱😨😱😨
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X