கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'வாய்தா'வை ஒழிப்போம்!

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது. மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம்
வாய்தா,ஒழிப்போம்,இது உங்கள் இடம்,court, Madras HC, High Court


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது. மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்ப வழி ஏற்படும்' என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிகாரம் இருந்தால், ஒரு ஊழல் வழக்கை, 20 ஆண்டுகள் கூட இழுத்தடிக்க முடியும் என்பதை, நாம் பார்த்திருக்கிறோம். நீதிமன்றம் கொடுக்கும், 'வாய்தா' என்ற சலுகை தான், பல குற்றவாளிகளை வாழ வைக்கிறது; அவர்கள் மீண்டும் தவறு செய்ய, ஊக்குவிக்கிறது.


latest tamil news'ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை, எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது' என, சட்டம் இயற்ற வேண்டும்.வழக்குகளை விரைந்து முடிக்கும் அளவிற்கு, நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வழக்கிற்கு, காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். நீதி வழங்குவதற்கு பெரும் இடையூறாக இருப்பது, நீதிமன்றம் வழங்கும், தேவையற்ற வாய்தா தான். எதிர்காலத்தில், வாய்தா இல்லாத நீதிமன்றங்கள் உருவாக வேண்டும். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றத்தைக் கண்டால், அச்சம் ஏற்பட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஏப்-202120:50:19 IST Report Abuse
தல புராணம் நம்ம ஆர்குமெண்டை கேக்க எந்த நீதிபதியும் வரல்லை வாய்தா வாங்கிட்டு போயிட்டாங்களே 😩
Rate this:
Cancel
07-ஏப்-202120:21:36 IST Report Abuse
Akilan Archana நம் நாட்டில் தவறான வக்கீல்கள் இருக்கும் வரை இது இப்படித்தான் செல்லும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-ஏப்-202119:33:19 IST Report Abuse
Darmavan ஒரே வழி மோடி அரசு தன் அதிகாரத்தை காட்டி எல்லா வழக்கும்கால நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையேல் இப்படித்தான்
Rate this:
venkata achacharri - india,இந்தியா
09-ஏப்-202110:29:35 IST Report Abuse
venkata achacharri அப்படி வோட்டை மட்டும் போட்டா பேச்சு இப்போ தாலுகா ஆபீஸ் வி எ ஓ ஆபீஸ் ரேகிச்ற்றடின் ஆபீஸ் லீன்ஸ் ஆபீஸ் உலை ஒளித்து விட்டாரா வெட்டி பேச்சு மட்டும் தான் அதற்க்கு பேசாமல் இருக்கும் கோக்ரேஸ்ஸ் மேல் ஏதேனும் ஒரு வழிமுறை அல்லது ஒரு குறித்தேர்க்கும் மைய அமைத்ததை உண்டா எதனை patta veligal பெண்டிங் உண்டு என்று அவர்க்கு கணக்கு தெரியுமா எல்லாம் வெட்டி petchu ரிப்போர்ட் கூட கேட்கமற்றகள் ரிப்போர்ட் கேட்டல் கூட பாதி லஞ்சம் குறைத்து இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X