பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணி ஆசிரியருக்கு விடுமுறை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி பரிந்துரை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை : சட்டசபை தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர், கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும் இன்று (ஏப்.,7) ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்,'' என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பணியில் 8069 அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். நேற்று ஓட்டுப்பதிவு முடிந்து

சிவகங்கை : சட்டசபை தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர், கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும் இன்று (ஏப்.,7) ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்,'' என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.

சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பணியில் 8069 அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். நேற்று ஓட்டுப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகளை எண்ணும் மையத்திற்கு கொண்டு சேர்ப்பதற்குள் நள்ளிரவு ஆகிவிடும்.

இதனால், மறுநாள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், கல்வித்துறை ஊழியர்களுக்கு (ஏப்.,7) இன்று விடுமுறை வழங்குமாறு, தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர், கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டுமே ஒரு நாள் விடுமுறை வழங்க பரிந்துரை செய்தார். தேர்தல் பணியில் ஈடுபடாத தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பிளஸ் 2 மாணவர்களின் பொது தேர்வு பாதிக்காத வகையில் இன்று பள்ளிக்கு செல்ல வேண்டும், என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X