பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு இயந்திரத்தில் பழுது; ஓட்டுப்பதிவு தாமதமாக துவக்கம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தேனி : ஆண்டிபட்டி ராசாக்காபட்டி 155வது ஓட்டுச்சாவடியில் மின்னணு இயந்திர பழுதால் ஓட்டுப்பதிவு ஒருமணி நேரம் தாமதமாக துவங்கியது.ஆண்டிபட்டி தொகுதியில் நேற்று காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 5:00 மணி நிலவரப்படி 67.60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் குடும்பத்தினருடன் முத்தனம்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி

தேனி : ஆண்டிபட்டி ராசாக்காபட்டி 155வது ஓட்டுச்சாவடியில் மின்னணு இயந்திர பழுதால் ஓட்டுப்பதிவு ஒருமணி நேரம் தாமதமாக துவங்கியது.

ஆண்டிபட்டி தொகுதியில் நேற்று காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 5:00 மணி நிலவரப்படி 67.60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் குடும்பத்தினருடன் முத்தனம்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். தி.மு.க., வேட்பாளர் மகாராஜன் குடும்பத்தினருடன் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.

* தி.மு.க., வேட்பாளர் தான் ஓட்டுப்பதிவு செய்த ஓட்டுச்சாவடியில் போதிய மின்சாரம் வசதி இல்லாமல் இருளில் மூழ்கியதாக தெரிவித்தார்.

* ராசாக்காபட்டி 155வது ஓட்டுச்சாவடியில் காலையில் 6:00 முதல் 7:00 மணி வரை மாதிரி ஓட்டுப்பதிவு பிரச்னை இன்றி முடிந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டது. சீரமைக்கப்பட்டு 8:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்கியது.

* டி.சுப்புலாபுரத்தில் அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தி.மு.க.,வினர் போலீசாருக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் அளித்து, இருதரப்பு பிரச்னை ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X