ஓட்டுச்சாவடி மாற்றத்தை கண்டித்து ஓட்டளிக்க மறுத்து எதிர்ப்பு; அதிகாரிகள் சமரசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி மாற்றத்தை கண்டித்து ஓட்டளிக்க மறுத்து எதிர்ப்பு; அதிகாரிகள் சமரசம்

Added : ஏப் 07, 2021
Share
தேனி : தேனி ஊஞ்சாம்பட்டியில் ஓட்டுச்சாவடி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளிக்க மறுத்து வாக்காளர்கள் திரண்டதால் ஓட்டுப்பதிவு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.பெரியகுளம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி கள்ளர் துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி இருந்தது. இங்கு மேலத்தெரு, மந்தையம்மன் தெரு பகுதி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்ததால்

தேனி : தேனி ஊஞ்சாம்பட்டியில் ஓட்டுச்சாவடி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளிக்க மறுத்து வாக்காளர்கள் திரண்டதால் ஓட்டுப்பதிவு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

பெரியகுளம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி கள்ளர் துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி இருந்தது. இங்கு மேலத்தெரு, மந்தையம்மன் தெரு பகுதி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்ததால் இந்திரா காலனியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 209, 209 ஏ என 2 ஓட்டுச்சாவடிகளாக பிரித்துள்ளனர். நேற்று இங்கு தலா 140 ஓட்டுக்கள் பதிவானநிலையில் மேலத்தெருவை சேர்ந்த வாக்காளர்கள் பழைய ஓட்டுச்சாவடி மாற்றப்பட்டது ஏன் புதிய ஓட்டுச்சாவடி துாரம் அதிகம் என்று கூறி ஓட்டளிக்க செல்ல மாட்டோம் என ரோட்டில் திரண்டனர்.

இப் பிரச்னையால் ஒரு மணிநேரம் இரு ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஓட்டளிக்க வரவில்லை. ஏஜென்டுகளும் வெளியேறினர். டி.எஸ்.பி. முத்துராஜ் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் மதியம் ஒரு மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு செய்ய முன்வந்து ஒவ்வொருவராக சென்று ஓட்டளித்தனர்.ஓட்டுச்சாவடி மாற்ற கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டதில் யாரும் எதிர்க்க வில்லை. மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் மனு வழங்காததால் ஓட்டுச்சாவடி மாற்றப்பட்டது என தேர்தல் அலுவலர் சினேகா தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X