கம்பம் : கம்பம் சட்டசபை தொகுதியில் நகரங்களில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தபோதும் கிராமங்களில் மந்த நிலையே இருந்தது.
இத் தொகுதியில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார்,கோம்பை போன்ற நகரங்களில் ஓட்டுப்பதிவில் விறுவிறுப்பான நிலை காணப்பட்ட போதும் கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மந்த நிலையே இருந்தது. வீல்சேரில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வந்து ஓட்டளித்தனர். காலை 9:00 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து ஓட்டுப்பதிவு மந்தமானது.* அணைப்பட்டியில் அரசியல் கட்சி அதிக ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் சேலைகளை வழங்கியுள்ளது.
* கம்பம், அம்மாபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.* நாராயணத்தேவன்பட்டியில் ஓட்டளிக்க வந்த போடி தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுடன் பணியாளர்கள் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.*கம்பத்தில் தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன், விவிபேடில் சின்னம் தெரிகிறதா என்பதை சரிபார்த்து திரும்பினார்.
* அ.தி.மு.க., வேட்பாளர் சையதுகான் உத்தமபாளையத்தில் ஓட்டளித்தபோது அவரது அடையாள அட்டையின் எண் தெரியாததால், ஓட்டுச்சாவடி அலுவலர், அருகில் இருந்தவரிடம் காண்பித்து எண்ணை சரியாக கூறும்படிகேட்டார்.* கம்பத்தில் ஓட்டளித்தவருக்கு விரலில் அடையாள மை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
* உ.அம்மாபட்டி ஓட்டுச்சாவடியில் கட்சி கரைவேட்டி கட்டி ஓட்டளிக்க அனுமதியில்லை என்று பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் கூறியதால் சர்ச்சை எழுந்தது.* ஓட்டுச்சாவடிகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE