பெரியகுளம் : பெரியகுளத்தில் பெற்றோரின் உதவியுடன் கண்பார்வையற்ற அண்ணன், தம்பி ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றினர்.
பெரியகுளம் தெற்குதெருவைச் சேர்ந்த ஜெயபால் - ராணி தம்பதிகளின் மாற்றுத்திறனாளி மகன்கள் சண்முகம் 38, சரவணன் 36. கண்பார்வையற்ற இவர்கள் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். பெற்றோர் இருவரையும் பெரியகுளம் தென்கரை செவன்த்டே பள்ளியில் ஓட்டளிக்க அழைத்து வந்தனர். சிறப்பு அனுமதி பெற்று தந்தை உதவியுடன் ஓட்டளித்தனர்.
அண்ணன், தம்பி கூறியதாவது: எந்த வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இவர் மக்களுக்கு நல்லது செய்வாரா, இவர் சார்ந்துள்ள கட்சி மக்களுக்கு நல்லது செய்யுமா என யூகித்தோம். அதன்படி இருவரும் ஒரே வேட்பாளருக்கு தான் ஓட்டளித்தோம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE