பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு இடங்களில் ஓட்டு இயந்திரங்கள் பழுது

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தேனி : தேனிமாவட்டத்தில் ஆறு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதால் சிறிது நேரம் ஓட்டுப்பதிவு தடைபட்டது.தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 1561 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 2801 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று ஓட்டுப்பதிவின் போது தேவாரத்தில் 11 ஏ. ஓட்டுச்சாவடியில் இயந்திரம் பழுது ஏற்பட்டது. பின் சரி செய்து

தேனி : தேனிமாவட்டத்தில் ஆறு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதால் சிறிது நேரம் ஓட்டுப்பதிவு தடைபட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 1561 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 2801 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று ஓட்டுப்பதிவின் போது தேவாரத்தில் 11 ஏ. ஓட்டுச்சாவடியில் இயந்திரம் பழுது ஏற்பட்டது. பின் சரி செய்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. கண்டமனுார் 141 ஓட்டுசாவடியிலும் இயந்திரம் பழுது ஏற்பட்டு10 நிமிடம் பதிவு தாமதம் ஆனது.

இதே போல் பெரியகுளம் 195 ஓட்டுச்சாவடி, இ.புதுக்கோட்டை 19 வது ஓட்டுச்சாவடி, போடி 147 இருபாலர் ஓட்டுச்சாவடி, ஆண்டிபட்டி தொகுதி சுந்தராஜபுரம் 271 ஓட்டுச்சாவடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் பழுது சீரமைக்கப்பட்டது. இதில் 10 முதல் 20 நிமிடங்கள் ஓட்டுப்பதிவு தடை பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X