ஒரே பெயரில் இரு வாக்காளர்கள்; முதலில் வந்தவர் ஓட்டளித்தார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே பெயரில் இரு வாக்காளர்கள்; முதலில் வந்தவர் ஓட்டளித்தார்

Added : ஏப் 07, 2021
Share
தேனி : ஆண்டிபட்டி தொகுதியில் ஒரே பெயரில் இரு வாக்காளர்கள் இருந்த குழப்பத்தால் முதலில் வந்தவர் ஓட்டளித்தார்.ஆண்டிபட்டி தேவராஜ்நகர் முத்தையா மகன் பெரியசாமி 55. கூலித் தொழிலாளி. இவர் தேவராஜ்நகர் ஓட்டுச்சாவடி எண்.166க்கு சென்றார். இவரது ஓட்டுக்கு உரிய பெயரில் அவசரத்தில் அதே பகுதியை சேர்ந்த சீனி மகன் பெரியசாமி 50, என்ற வாக்காளரின் விபரத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்',

தேனி : ஆண்டிபட்டி தொகுதியில் ஒரே பெயரில் இரு வாக்காளர்கள் இருந்த குழப்பத்தால் முதலில் வந்தவர் ஓட்டளித்தார்.

ஆண்டிபட்டி தேவராஜ்நகர் முத்தையா மகன் பெரியசாமி 55. கூலித் தொழிலாளி. இவர் தேவராஜ்நகர் ஓட்டுச்சாவடி எண்.166க்கு சென்றார். இவரது ஓட்டுக்கு உரிய பெயரில் அவசரத்தில் அதே பகுதியை சேர்ந்த சீனி மகன் பெரியசாமி 50, என்ற வாக்காளரின் விபரத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்', டிக்' செய்து ஓட்டுப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அவரும் ஓட்டளித்தார். அதன்பின் சென்ற சீனி மகன் பெரியசாமி தன் பெயரில் ஏற்கனவே ஓட்டளிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உறவினர்கள் ஓட்டளிக்க மறுத்தனர்.மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி, தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி, சேலஞ்சிங்' ஓட்டாக பதிவு செய்ய 17 சி' படிவம் வழங்கினர். அதற்கு பெரியசாமி மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளதாக கூறினார். உறவினர்கள் 26 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X