கொடைக்கானல் : சட்டசபை ஓட்டுப்பதிவையடுத்து கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க வார விடுமுறை தினங்களில் கொடைக்கானலில் பயணிகள் கூடுவது வழக்கம். காலையிலேயே ஜனநாயக கடமையை முடித்த சில பயணிகளே கொடைக்கானல் வந்திருந்தனர்.ரோட்டோர கடைகள், விடுதிகள், உணவகங்கள் பாதிக்கு மேலாக மூடப்பட்டிருந்தன. முக்கிய சுற்றுலாத் தலங்களான கோக்கர்ஸ் வாக், பூங்காக்கள், ஏரிச்சாலை வெறிச்சோடி காணப்பட்டன.
கோடையில் பரபரப்பாக இருக்கும் கொடைக்கானல் நகரம் நேற்று களையிழந்து, அமைதியாக இருந்தது.நகரமே வெறிச்சோடியதால் குரங்கு போன்ற வனவிலங்குகள் பசியால் வாடின. வழக்கம்போல பயணிகள் அளிக்கும் உணவை எதிர்பார்த்து ஏராளமான குரங்குகள் ரோட்டோர சுவர்களில் முகாமிட்டிருந்தன. அவற்றை கண்ட சிலர், கேரட் மற்றும் பழங்களை விலைக்கு வாங்கி குரங்குகளின் பசியாற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE