சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., வேட்பாளருக்கு கொலை மிரட்டல்; தி.மு.க.,வினர் மீது புகார்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் ஓட்டுச்சாவடி முன்பு தி.மு.க.,வின் பட்டுவாடாவை தட்டிக்கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆத்துார் தொகுதியில் தி.மு.க.,வின் ஐ.பெரியசாமியை எதிர்த்து பா.ம.க., வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். மார்ச் 23ல் வீ.கூத்தம்பட்டியில் பிரசாரம் செய்த போது திலகபாமா மீது கத்திக்குத்து முயற்சி நடந்தது. செம்பட்டி

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் ஓட்டுச்சாவடி முன்பு தி.மு.க.,வின் பட்டுவாடாவை தட்டிக்கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆத்துார் தொகுதியில் தி.மு.க.,வின் ஐ.பெரியசாமியை எதிர்த்து பா.ம.க., வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். மார்ச் 23ல் வீ.கூத்தம்பட்டியில் பிரசாரம் செய்த போது திலகபாமா மீது கத்திக்குத்து முயற்சி நடந்தது. செம்பட்டி போலீசில் புகார் செய்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. குட்டியபட்டி பிரசாரத்திலும் வாக்குவாதம், கைகலப்பில் தி.மு.க.,வினர் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.நேற்று சின்னாளபட்டி அருகே மேட்டுப்பட்டி ஓட்டுச்சாவடியில் பட்டுவாடாவின் போது, பறக்கும்படையினர் 3 பெண்களை கையும் களவுமாக பிடித்தனர்.

அங்கு வந்த திலகபாமா உடனே மறியல் செய்தார். அப்போது தி.மு.க.,வினர் கொலை மிரட்டல் விடுத்ததாக சின்னாளபட்டி போலீசில் புகார் செய்தார்.வேட்பாளர் திலகபாமா அளித்த மனுவில், 'பட்டுவாடா புகார் தொடர்பாக ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த பி.சி.முரளிதரன், முருகேசன் ஆகியோர் 'கழுத்தை அறுத்து விடுவதாக' கொலை மிரட்டல் விடுத்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X