பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு வழிமுறைகளை அதிகரிக்க முடிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதற்குபின் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என ஏற்கனவே சுகாதாரத்துறை தெரிவித்திருந்து. அதன்படி இன்று பரிசோதனை உட்பட பல்வேறு தடுப்பு வழிமுறைகளை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.கொரோனாவால்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதற்குபின் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என ஏற்கனவே சுகாதாரத்துறை தெரிவித்திருந்து. அதன்படி இன்று பரிசோதனை உட்பட பல்வேறு தடுப்பு வழிமுறைகளை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.கொரோனாவால் ஒரு நபர் பாதிக்கப்பட்டால் அவர் சென்று வந்த இடம், உறவினர்கள், சுற்றியுள்ளவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.

இதுவரை 15 முதல் 20 பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன. இனி 40 பேர் வரை பரிசோதனை செய்ய உள்ளனர். விழிப்புணர்வு மற்றும் முகாம்களை அதிகப்படுத்தி பொதுபரிசோதனைகள் செய்ய உள்ளனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் ஆரம்ப கட்டத்தில் என்னென்ன முறைகள் பின்பற்றப்பட்டதோ அதனை மீண்டும் கடைபிடிக்க இருக்கிறோம்.அதன் ஒரு பகுதியாகவே வணிக வளாகங்கள், கடைவீதிகளில் ஆய்வு மேற்கொள்ளபட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தினமும் ஒரு மையத்தில் 300 முதல் 520 பேர் வரை வருகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X