ஓட்டுச்சாவடியில் தி.மு.க., பட்டுவாடா; பா.ம.க., வேட்பாளர் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடியில் தி.மு.க., பட்டுவாடா; பா.ம.க., வேட்பாளர் மறியல்

Added : ஏப் 07, 2021
Share
சின்னாளபட்டி : சின்னாளபட்டி ஓட்டுச்சாவடியில் பட்டுவாடா செய்த தி.மு.க.,வினரை, பறக்கும்படையினர் கையும் களவுமாக பிடித்ததால் ஓட்டுப்பதிவு 45 நிமிடம் நிறுத்தப்பட்டது.ஆத்துார் தொகுதி சின்னாளபட்டி மேட்டுப்பட்டி ஓட்டுச்சாவடிக்கு பகல் 12:15 மணிக்கு பறக்கும்படையினர் வந்தனர். அங்கு தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க பணம் வினியோகித்ததாக சிக்கனம்பட்டி அமுதா 40, உள்பட 3 பெண்கள் பிடிபட்டனர்.

சின்னாளபட்டி : சின்னாளபட்டி ஓட்டுச்சாவடியில் பட்டுவாடா செய்த தி.மு.க.,வினரை, பறக்கும்படையினர் கையும் களவுமாக பிடித்ததால் ஓட்டுப்பதிவு 45 நிமிடம் நிறுத்தப்பட்டது.

ஆத்துார் தொகுதி சின்னாளபட்டி மேட்டுப்பட்டி ஓட்டுச்சாவடிக்கு பகல் 12:15 மணிக்கு பறக்கும்படையினர் வந்தனர். அங்கு தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க பணம் வினியோகித்ததாக சிக்கனம்பட்டி அமுதா 40, உள்பட 3 பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் தி.மு.க., அ.தி.மு.க.,வினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் 45 நிமிடங்கள் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. அங்கு வந்த பா.ம.க., வேட்பாளர் திலகபாமா, 'தி.மு.க.,வினர் பட்டுவாடா, கள்ளஓட்டு பதிவு போன்றவற்றில் ஈடுபடுவதாகக்கூறி மறியல் செய்தார்.கூடுதல் எஸ்.பி., இனிகோதிவ்யன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கட்சி மேலிடம் அறிவுறுத்தியதால் போலீசில் புகார் அளித்து கலைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X