தினமும் குளியல் போடும் குதிரைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் குளியல் போடும் குதிரைகள்

Added : ஏப் 07, 2021
Share
தாண்டிக்குடி : நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொடைக்கானலிலும் உஷ்ணம் அதிகரித்து விட்டது.இங்கு சில வாரங்களாக அதிகரித்துள்ள சீதோஷ்ண நிலையால் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க இரவில் மின் விசிறிகளை பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. கால்நடைகளும் வெயிலை சமாளிக்க நீர்நிலைகளை தேடிச் செல்கின்றன.விளைபொருட்களை விவசாய நிலங்கள் இருந்து கொண்டு வரும்

தாண்டிக்குடி : நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொடைக்கானலிலும் உஷ்ணம் அதிகரித்து விட்டது.இங்கு சில வாரங்களாக அதிகரித்துள்ள சீதோஷ்ண நிலையால் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க இரவில் மின் விசிறிகளை பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. கால்நடைகளும் வெயிலை சமாளிக்க நீர்நிலைகளை தேடிச் செல்கின்றன.

விளைபொருட்களை விவசாய நிலங்கள் இருந்து கொண்டு வரும் குதிரைகளும் விதிவிலக்கல்ல. இக்குதிரைகளின் வெப்பத்தை தணிக்க, இவற்றைத் தண்ணீரால் தினமும் குளிக்க வைக்கின்றனர். குளிர் வாசஸ்தலங்களிலும், மனிதர்களை வாட்டும் வெயில் கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X