தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 77 சதவீதம் ஓட்டுப்பதிவு!

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் கட்சியினர், சுயேச்சைகளாக பழநியில் 24, ஒட்டன்சத்திரத்தில் 14, ஆத்துாரில் 20, நிலக்கோட்டையில் 18, நத்தத்தில் 15, திண்டுக்கல்லில் 21, வேடசந்துாரில் 20 உட்பட 132 பேர் போட்டியிட்டனர்.ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 14 ஆயிரத்து 386, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488, இதரர் 203 என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 பேர் உள்ளனர்.நேற்று நடந்த தேர்தலில்

திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் கட்சியினர், சுயேச்சைகளாக பழநியில் 24, ஒட்டன்சத்திரத்தில் 14, ஆத்துாரில் 20, நிலக்கோட்டையில் 18, நத்தத்தில் 15, திண்டுக்கல்லில் 21, வேடசந்துாரில் 20 உட்பட 132 பேர் போட்டியிட்டனர்.

ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 14 ஆயிரத்து 386, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488, இதரர் 203 என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 பேர் உள்ளனர்.நேற்று நடந்த தேர்தலில் பழநியில் 73.11, ஒட்டன்சத்திரத்தில் 85.09, ஆத்துாரில் 77.92, நிலக்கோட்டையில் 75.58, நத்தத்தில் 79.07, திண்டுக்கல்லில் 68.94, வேடசந்துாரில் 80.23 என மாவட்டம் முழுதும் மொத்தம் 77 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டுப்பதிவு குறைவு:

கடந்த 2016 சட்டசபை தேர்தலை விட 3.27 சதவீதம் குறைவு. கடந்த தேர்தலில் பழநியில் 76.79, ஒட்டன்சத்திரத்தில் 84.91, ஆத்துாரில் 85.26, நிலக்கோட்டையில் 79.85, நத்தத்தில் 80.01, திண்டுக்கல்லில் 74.54, வேடசந்துாரில் 80.54 என மொத்தம் 80.27 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

மாவட்டத்தில் அதிகபட்ச ஓட்டுப் பெற்ற தொகுதியாக ஆத்துார் (85.26 சதவீதம்) சாதனை படைத்தது. இம்முறை அதிகபட்ச ஓட்டுப் பெற்ற தொகுதியாக ஒட்டன்சத்திரம் (85.09) இடம் பிடித்துள்ளது. கொரோனாவால் கடந்த தேர்தலை விட இம்முறை ஓட்டுப்பதிவு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X