பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இளம் வாக்காளர்களுக்கு போட்டியாக தள்ளாத வயதிலும் மூத்த குடிமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.கொரோனா முன்னெச்சரிக்கை 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்தது.அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2,635 பேர் தபால் ஓட்டளிக்க விருப்பம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இளம் வாக்காளர்களுக்கு போட்டியாக தள்ளாத வயதிலும் மூத்த குடிமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

கொரோனா முன்னெச்சரிக்கை 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்தது.அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2,635 பேர் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். நேற்று (ஏப்.6) 2,673 ஓட்டுச்சாவடிகளில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. இளம் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து ஓட்டைப்பதிவு செய்தனர்.

அதேபோல், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளப்பாதை, வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு உதவ 1,238 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இளம் வாக்காளர்களுக்கு போட்டியாக மூத்த குடிமக்கள், மாற்றுத்தினாளிகள் தங்கள் துணையுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். நடக்க முடியாத முதியோரை உறவினர்கள் துாக்கி வந்து ஓட்டுப்பதிவு செய்ய உதவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X