தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் மேல்

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: வட்டி குறைப்பு விஷயத்தில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகளை விட, அதிகளவில் வட்டியை குறைத்துள்ளன.கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்தன.இதில், ரிசர்வ் வங்கி, பல வட்டி குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அறிவித்து வந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தும், அதன் பலன்
interest waiver, Private Banks, Public Banks, SC order, SC

புதுடில்லி: வட்டி குறைப்பு விஷயத்தில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகளை விட, அதிகளவில் வட்டியை குறைத்துள்ளன.

கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்தன.இதில், ரிசர்வ் வங்கி, பல வட்டி குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அறிவித்து வந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தும், அதன் பலன் மக்களை சேரும் வகையிலான நடவடிக்கைகளை, பல வங்கிகள் எடுக்கவில்லை.


latest tamil news


குறிப்பாக தனியார் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி, வட்டியை குறைத்தும் தங்களுடைய வட்டி விகிதத்தை அந்த அளவுக்கு குறைக்கவில்லை.ரிசர்வ் வங்கியின் தரவுகளிலிருந்து, இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.ரிசர்வ் வங்கி, 1.15 சதவீதம் வட்டியை குறைத்த போது, பொதுத்துறை வங்கிகள், 1.14 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளன. இவ்வங்கிகளில், கடந்த ஆண்டு மார்ச்சில், 8.64 சதவீதமாக இருந்த வட்டி, இந்த ஆண்டு பிப்ரவரியில், 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆனால் தனியார் துறை வங்கிகள், 0.38 சதவீதம் அளவுக்கு மட்டுமே வட்டி குறைப்பை செய்துள்ளன. வெளிநாட்டு வங்கிகள், 0.63 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
07-ஏப்-202116:41:40 IST Report Abuse
MURUGESAN ஸ்டேட் பேங்கில் ஒரு கிளையிலிருந்து ஒன்னொரு கிளைக்கு பணம் செலுத்தும்போது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ஐம்பது ரூபாய் பரிமாற்ற கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நூறு ரூபாய் செலுத்தினால் ஐம்பது ரூபாய் பரிமாற்ற கட்டணமாக போய்விடும். நமது கணக்கில் ஐம்பது ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்படும். இந்த கொள்ளை தனியார் வங்கிகள் எதிலும் கிடையாது. இந்தியன் வங்கியில் சேமிப்புக்கணக்கிலிருந்து சிறு சிறு தொகையாக அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் பரிமாற்றம் செய்ததற்காக வாங்கி கணக்கிலிருந்து நான்காயிரம் ரூபாயை சேவைகடடனமாக நான் இழந்துள்ளேன். வங்கியில் கேட்டதற்கு சேமிப்புக்கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து பரிமாற்றங்கள் மட்டுமே செய்யலாம் அதற்குமேல் செய்தால் ஒரு பரிமாற்றத்திற்கு ஏழு ரூபாய் கடடனம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். அன்றிலிருந்து நான் இந்தியன் வாங்கி பக்கமே செல்வதில்லை. இந்த வகையான கொள்ளை நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியில் இல்லை. எனது சொந்த அனுபவத்தில் பொதுத்துறை மற்றும் அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளின் சேவை நடுத்தர வர்க்கத்தினருக்கு சாதகமாக உள்ளது என்பதே எனது கருத்து.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-202113:01:05 IST Report Abuse
Pugazh V . தனியார் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை என்றால் தனியார் வங்கிகள் தானே நல்லவை?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-202113:01:00 IST Report Abuse
தமிழவேல் பொதுத் துறை வங்கிகளில் ""உதாரணமாக"" பணத்தை டெபாசிட் செய்யும்போது, அதற்கு நமக்கு தரும் வட்டி 6 சதம் என்றும், நாம் வட்டிக்கு பணம் கேட்கும்போது, அவர்கள் கேட்கும் வட்டி 10 சதம் என்று வைத்துக்கொண்டால், தனியார்துறையில் 7 என்றும் 12 என்றும் இருக்கும். அதாவது, நம்மிடம் அதிக வட்டிக்கு வாங்கி, அதையே பிறருக்கு அதிக வட்டிக்குத் தருகின்றார்கள். ரிசர்வ் வங்கி குறைக்கும் பொது, அவர்களின் வட்டி விகிதாச்சாரத்தில்தான் குறைப்பார்களே தவிர, பொதுத்துறை அளவிற்கு தனது விகிதாசாரத்தை எப்படி கொண்டுவர முடியும் ? இன்னொன்று. இதன்படி, பொது வங்கிகளை தனியார்களிடம் தந்தால், அதிக வட்டிக்குத்தான் கடன் பெற முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X