பொது செய்தி

தமிழ்நாடு

'என் ஓட்டு... எனக்கில்லை...' புலம்பிய வாக்காளர்கள்

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை சோலையழகுபுரம், மகபூப்பாளையம் பூத்களில் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது.சோலையழகுபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சீத்தாலட்சுமி. நேற்று காலை ஓட்டளிக்க வந்தபோது, இவரது பெயரில் வேறு யாரோ ஓட்டளித்து சென்றது தெரிந்தது. இதைதொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த பின் அவரை தபால் ஓட்டளிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் அரசு

மதுரை : மதுரை சோலையழகுபுரம், மகபூப்பாளையம் பூத்களில் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது.

சோலையழகுபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சீத்தாலட்சுமி. நேற்று காலை ஓட்டளிக்க வந்தபோது, இவரது பெயரில் வேறு யாரோ ஓட்டளித்து சென்றது தெரிந்தது. இதைதொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த பின் அவரை தபால் ஓட்டளிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் அரசு பெண்கள் பள்ளியில் ஒத்தப்பட்டி சரவணபாண்டி ஓட்டளிக்க வந்தார். அவரது பெயரில் யாரோ ஓட்டளித்து சென்றது தெரிந்தது.

அவர் கூறுகையில், ''கடந்த தேர்தலில் இந்த பூத்தில்தான் ஓட்டளித்தேன். இப்போது கேட்டால் என் பெயரில் 3 ஓட்டுக்களை யாரோ போட்டுவிட்டதாக கூறுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் என் போட்டோ உள்ளது. அதை கவனிக்காமல் ஓட்டளிக்க அனுமதித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றார்.

அதேபோல் மதுரை வடக்கு தொகுதி சொக்கிக்குளம் ராயல் பள்ளி பூத்தில் எம். முருகேஸ்வரி என்பவரின் ஓட்டை டி.முருகேஸ்வரி என்பவர் பதிவு செய்தது தெரிந்தது. அதிகாரிகள் விசாரணையில் வாக்காளர் பட்டியலில் எம். முருகேஸ்வரி போட்டோ டி.முருகேஸ்வரி போட்டோவுக்கு பதில் அச்சடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது தேர்தல் கமிஷனின் தவறு என்பதால் எம். முருகேஸ்வரி ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எஸ்.எஸ்.காலனி ராஜிவ் ஜெயபால். மனைவியுடன் ஸ்ரீவித்யா பள்ளி பூத்திற்கு ஓட்டளிக்க வந்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் கூறுகையில், ''40 ஆண்டுகளாக ஓட்டளித்து வருகிறேன். என்னை போல் நாலைந்து பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வாக்காளரிடம் கருத்து கேட்காமல் பெயர் நீக்கப்பட்டுஉள்ளது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202105:43:01 IST Report Abuse
 oce வாக்காளர் பட்டியல்கள் லெக்சிகன். முக்கிய ஆவணம். தேர்தல் அலுவலர்கள் அதை அப்டேட் செய்யமல் பயன்படுத்தக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X