மதுரை : ''மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்தது'' என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
மதுரை ஆயுதப்படை மாநகராட்சி துவக்கப்பள்ளி பூத்தில் கலெக்டர் அன்பழகன் ஓட்டளித்தார். அங்கிருந்த அலுவலர்களிடம், கொரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து வந்தாலும் அவர்தான் ஆவணங்களின்படி வாக்காளரா என்பதை உறுதி செய்ய முகக்கவசத்தை அகற்றச்செய்து உறுதி செய்ய வேண்டும் என்றார்.
அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 3856 ஓட்டுச்சாவடிகளில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. சில மையங்களில் இயந்திர பழுதால் ஓட்டுப்பதிவு தாமதம் ஆனது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் நியமிக்கப்பட்ட இரு தன்னார்வலர்கள், வாக்காளர்களுக்கு கிருமி நாசினி தெளித்து முகக்கவசம் அணிந்து வந்ததை உறுதி செய்தனர்.
தேர்தல் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு விபரங்களை அதற்கென உள்ள தேர்தல் கமிஷன் செயலியில் 'அப்டேட்' செய்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மகளிர் பூத், 4 மாடல் பூத்கள் அமைக்கப்பட்டன. பதட்டமான 1330 ஓட்டுச்சாவடிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து பூத்களையும் வெப் கேமரா மூலம் கண்காணித்தோம். சுமூகமாக ஓட்டுப்பதிவு நடந்தது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE