தமிழ்நாடு

'சீல்' வைக்கப்பட்ட இயந்திரத்தை அ.தி.மு.க.,வினர் முன் திறந்த அதிகாரிகள்; ஓட்டுப்பதிவு மையத்தை முற்றுகையிட்ட மக்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜர்புரம் வாழைத்தோப்பு டாக்டர் முத்துச்சாமி நாடார் பள்ளி பூத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து மின்னணு இயந்திரத்திற்கு 'சீல்' வைக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., ஏஜன்ட்கள் முன்னிலையில் அதிகாரிகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினரும், அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த பூத்தில் நேற்றிரவு 7:00
'சீல்' வைக்கப்பட்ட இயந்திரத்தை அ.தி.மு.க.,வினர் முன் திறந்த அதிகாரிகள்;  ஓட்டுப்பதிவு மையத்தை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை : மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜர்புரம் வாழைத்தோப்பு டாக்டர் முத்துச்சாமி நாடார் பள்ளி பூத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து மின்னணு இயந்திரத்திற்கு 'சீல்' வைக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., ஏஜன்ட்கள் முன்னிலையில் அதிகாரிகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினரும், அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பூத்தில் நேற்றிரவு 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து கட்சிகளின் ஏஜன்டுகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. கட்சியினர் வெளியேறிய நிலையில், வி.வி.பேட் கருவிகளில் பேட்டரி கழற்றாமல் 'சீல்' வைக்கப்பட்டது தெரிந்தது. வெளியே சென்ற கட்சியினரை அதிகாரிகள் அழைத்தனர். அ.தி.முக., வினர் மட்டும் இருந்த நிலையில் ஒரு வி.வி.பேட் கருவியின் சீலை உடைத்து பேட்டரியை கழற்றினர்.

மற்றொரு இயந்திரத்தில் அதிகாரிகள் கழற்றும்போது அங்கு வந்த ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி ஏஜன்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'ஓட்டுப்பதிவு விபரங்கள் எதுவும் அழியாது' என்ற அதிகாரிகள் சமரசத்தை ஏற்காமல் தி.மு.க., கூட்டணி கட்சியினரும், அப்பகுதி மக்களும் பூத் முன்பு இரவு 8:00 மணி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 11:00 மணி வரை நீடித்தது.பூமிநாதன் தரப்பில் கேட்டபோது, 'எங்கள் ஏஜன்டுகள் வெளியேதான் இருந்தனர். அவர்களை அழைக்காமல் அ.தி.மு.க.,வினரை மட்டும் அழைத்து சீலை அகற்றி இயந்திரத்தை திறந்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X