கோயில் அடிமை நிறுத்து இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு| Dinamalar

'கோயில் அடிமை நிறுத்து' இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (90) | |
மதுரை: 'கோயில் அடிமை நிறுத்து' இயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை
கோயில் அடிமை நிறுத்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆதரவு

மதுரை: 'கோயில் அடிமை நிறுத்து' இயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.

கோயில்களே மனிதனின் வளர்ச்சிக்கான மையங்களாக உள்ளன. தினசரி பூஜைகள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடக்கின்றன. 64 கலைகளும் வளர்க்கப் படுகின்றன. தேவாரம், பிரபந்தம் பாடுவதிலும் ராகங்கள் உள்ளன.கோயில்களுக்கு தானங்கள்:


தீர்த்தங்கள், தல விருட்சங்கள் என இயற்கையை, பஞ்ச பூதங்களை போற்றும் மதம் ஹிந்து மதம். இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்களை நாம் வளர்த்திருக்க வேண்டும். நம் முன்னோர்களும், அரசர்களும் கோயில்களை வெறும் கட்டு மானத்தோடு நிறுத்தவில்லை. பல ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடக்க பல தானங்களை தந்துள்ளனர். தீபம் ஏற்றக்கூட தனி தானம் உள்ளது.

ஆனால் கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரி அன்னையை பாதுகாக்கவும், திருக்கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த திருக்கோயில் அடிமை நிறுத்து' இயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயற்சிக்கிறார்.


latest tamil news

பக்தர்கள் பங்களிப்பு:


தர்ம சிந்தனை உள்ள பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பதி நிர்வாகம் போன்று கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும்.

தற்போது பக்தர்களின் அன்பளிப்பு இருக்கிறது, பங்களிப்பும் இருக்க வேண்டும். நிர்வாகம், நிதி, நியமங்கள் அனைத்திலும் பக்தர்கள் பங்களிப்பு வேண்டும்.எனவே கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X