பொது செய்தி

இந்தியா

ஏப்.,24ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் என்.வி.ரமணா

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 48வது தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி.ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். வரும், 24ம் தேதி, அவர் பதவியேற்க உள்ளார்.பரிந்துரை:உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியாக உள்ள, எஸ்.ஏ.பாப்டே, வரும், 23ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி. ரமணாவின் பெயரை, அவர் பரிந்துரைத்திருந்தார். அது ஏற்கப்பட்டு,
NV Ramana, CJI,Supreme Court,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 48வது தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி.ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். வரும், 24ம் தேதி, அவர் பதவியேற்க உள்ளார்.


பரிந்துரை:


உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியாக உள்ள, எஸ்.ஏ.பாப்டே, வரும், 23ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி. ரமணாவின் பெயரை, அவர் பரிந்துரைத்திருந்தார். அது ஏற்கப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி, என்.வி. ரமணா நியமிக்கப்படுவதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரபுபடி, பிரதமரின் முதன்மைச் செயலர், பி.கே. மிஸ்ரா, சட்டத் துறை செயலர் பரூன் மித்ரா ஆகியோர், நியமன உத்தரவை, நீதிபதி ரமணாவிடம் ஒப்படைத்தனர். வரும், 24ம் தேதி, நாட்டின், 48வது தலைமை நீதிபதியாக, ரமணா பதவியேற்க உள்ளார். வரும், 2022, ஆக., 26 வரை, அவர் இந்தப் பதவியில் இருப்பார்.


latest tamil newsஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் கிராமத்தில் பிறந்த ரமணா, 1983ல், வழக்கறிஞராக பணியாற்றினார். ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2000ல் நியமிக்கப் பட்டார். அங்கு, 2013ல், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். பின், டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கியது தொடர்பான வழக்கு, 'தகவல் அறியும் சட்டம், தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் பொருந்தும்' என்ற வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்கில் தீர்ப்பு அளித்த அமர்வில், இவர் இடம்பெற்று இருந்தார்.


தள்ளுபடி


'ஆந்திர உயர் நீதிமன்ற விவகாரத்தில் தலையிடுகிறார்' என, ரமணா மீது ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங். தலைவருமான, ஜெகன்மோகன் அளித்த புகாரை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பதவிக்கு அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஏப்-202116:19:57 IST Report Abuse
Endrum Indian எனக்கு என்னவோ சரியென்று படவில்லை ரமணாவின் பதவியேற்பு ஏன் ???ரமணா மஹரிஷியின் போதனைகள் இவர் மூலமாக அரங்கேற்றப்படப்போகின்றது ???அவன் அவன் ஐயோ குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கப்போகின்றான் மிக மிக விரைவில்
Rate this:
Krishnamoorthy Premkumar - Ahmadnagar,இந்தியா
07-ஏப்-202120:38:46 IST Report Abuse
Krishnamoorthy Premkumarலூசு மாதிரி ஒரு கமெண்ட்டு. பெயரில் என்ன இருக்கு?...
Rate this:
Krishnamoorthy Premkumar - Ahmadnagar,இந்தியா
07-ஏப்-202120:39:50 IST Report Abuse
Krishnamoorthy Premkumarமுட்டாள் தனமான கமெண்ட். பெயரில் என்ன இருக்கு?...
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
07-ஏப்-202113:54:09 IST Report Abuse
Nellai tamilan அவர்கள் மீதான குற்றசாட்டுகளை அவர்களே தள்ளுபடி செய்து கொள்வார்கள். பாவம் ஜனநாயகம்
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
07-ஏப்-202111:54:06 IST Report Abuse
ganapati sb thennagam serntha puthiya thalaimai neethipathiku vaalthukkal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X