பொது செய்தி

தமிழ்நாடு

103 வயது  முதியவர் ஆர்வமுடன் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : முனிவாழை கிராமத்தில் 103 வயது 'இளைஞர்' சக்கர நாற்காலியில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். ரிஷிவந்தியம் தொகுதி, முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி,103; இவர் தனது 101 வயதில் கடந்த2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ஓடடு போட்டார்.இந்த தேர்தலில், தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளதா என தேர்தல் அதிகாரிகள் கோரினர். அதனை மறுத்த முதியவர் முத்துசாமி, தேர்தல்

தியாகதுருகம் : முனிவாழை கிராமத்தில் 103 வயது 'இளைஞர்' சக்கர நாற்காலியில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ரிஷிவந்தியம் தொகுதி, முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி,103; இவர் தனது 101 வயதில் கடந்த2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ஓடடு போட்டார்.இந்த தேர்தலில், தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளதா என தேர்தல் அதிகாரிகள் கோரினர். அதனை மறுத்த முதியவர் முத்துசாமி, தேர்தல் அன்று ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டு போடுவதாக கூறினார். அதன்படி, அவர் நேற்று தனது குடும்பத்தினர் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து, முனிவாழை அரசு துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட 173வது ஓட்டுசாவடியில், தன் ஓட்டை பதிவு செய்தார்.

சின்னசேலம்சங்கராபுரம் தொகுதியில், சின்னசேலம் அடுத்த வானகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் எட்டாணி,110; இவர், நேற்று தனது குடும்பத்தினர் உதவியுடன், சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச் சாவடிக்கு சென்று, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உதவியுடன் தனது ஓட்டை பதிவு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X