சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினரை கண்டித்து

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரியை சேர்ந்தவர் சின்னமணி மகன் சிதம்பரம்,20; பா.ம.க., வை சேர்ந்த இவர் நேற்று மாலை மாதவச்சேரி அரசு பள்ளி ஓட்டுசாவடி முன் தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஓட்டுச்சாவடியில் இருந்து வெளியே வந்த தி.மு.க.,வினருக்கும், பா.ம.க.,வினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், தி.மு.க.,வினர், சிதம்பரத்தை தாக்கினர். இதில்,

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரியை சேர்ந்தவர் சின்னமணி மகன் சிதம்பரம்,20; பா.ம.க., வை சேர்ந்த இவர் நேற்று மாலை மாதவச்சேரி அரசு பள்ளி ஓட்டுசாவடி முன் தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஓட்டுச்சாவடியில் இருந்து வெளியே வந்த தி.மு.க.,வினருக்கும், பா.ம.க.,வினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், தி.மு.க.,வினர், சிதம்பரத்தை தாக்கினர். இதில், படுகாயமடைந்த சிதம்பரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அதனை அறிந்த பா.ம.க.,வினர், தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினரை கைது செய்ய வலியுறுத்தி இரவு 9.45 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி., ராமநாதன், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X